செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (16:31 IST)

நீ இங்க இருந்து கிளம்பு; யாஷிகாவிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. 85 நாட்களுக்கு பிரகு தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையாக விளையாடி வருவதாக பலரும் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தன்னை இத்தனை நாள் காப்பாற்றிய தோழி யாஷிகாவையே எதிர்த்து கத்தி சண்டையிடுகிறார் ஐஸ்வர்யா. ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அருகில் வந்த யாஷிகா, "நீ செய்யும் தப்புக்கு அடுத்தவங்களை சம்மந்தப்படுத்தி பேசாதே என கூறுகிறார். உங்களுக்காக தான் நான் அவர்களிடம் சென்று பேசியதாக கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யா யாஷிகாவிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போகிறார்.  மேலும் ஆமாம் நான் பொய் சொல்கிறேன் என கத்துகிறார். இவரின் பேச்சால் டென்ஷன் ஆன யாஷிகா, நீ இங்கிருந்து போ என கூறுகிறார். ஆனால்  ஐஸ்வர்யா நான் ஏன் போகவேண்டும் நீ போ என கூறுகிறார்.
 
பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாளாக ஒன்றாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த வார எவிக்க்ஷனில் ஐஸ்வர்யா இருக்க  கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.