வசனகர்த்தாவாக மாறிய யோகிபாபு
அமீர் நடித்த 'யோகி' படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று நம்பர் ஒன் காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. காமெடி நடிகரை அடுத்து 'தர்மபிரபு, 'கூர்கா' மற்றும் 'ஜோம்பி ஆகிய படங்களில் யோகிபாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் யோகிபாபு தான் நடிக்கும் காட்சிகளுக்கு தானே வசனம் எழுதவும் முயற்சித்து வருகிறார். இதன் முதல்படியாக தற்போது நடித்து வரும் 'தர்மபிரபு' படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கு அவரே வசனம் எழுதுகிறாராம். இது வொர்க் அவுட் ஆனால் இனிவரும் படங்களுக்கு அவரே வசனம் எழுதுவார் என்று கூறப்படுகிறது.
முத்துகுமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகி வரும் 'தர்மபிரபு' படத்தில் யோகிபாபுவுடன் ராதாரவி, கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்னை ஸ்டுடியோ ஒன்றில் பலகோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட எமலோகம் செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.