பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த யாஷிகா: முன்னாள் காதலருக்கு அறிவுரை!
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த யாஷிகா: முன்னாள் காதலருக்கு அறிவுரை!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென சிறப்பு விருந்தினராக யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா தற்போதைய சீசனின் போட்டியாளரான நிரூப்பின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த யாஷிகா, நிரூப் நன்றாக விளையாடுவதாகவும் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்
மேலும் ராஜூ உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறிய அவர் நீங்கள் அனைவரும் வெளியே வந்தவுடன் மிகச் சிறந்த அளவில் வளர்ச்சி அடைவீர்கள் என்றும் வாழ்த்து தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டிற்கு யாஷிகா திடீரென வந்தது போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது