யு சான்றிதழுடன் வரும் எமன்
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது.
ஆகவே வரிச்சலுகையுடன் எமன் வரும் 24 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.