திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:32 IST)

எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட இயக்குனர் மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ் இலக்கிய உலகில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனரஞ்சக நாவல் வகைமையில் கிளாசிக்கான ஒன்றாக திகழ்ந்து வருகிறது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தால் படமாக்கப்பட்டது. அதையடுத்து மீண்டும் கல்கியின் படைப்புகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிக்கையாளர் எஸ் சந்திரமௌலி “பொன்னியின் செல்வர்” என்ற பெயரில் எழுத, அதை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். மேலும் இதுகுறித்து பேசிய மணிரத்னம் “எழுத்தாளர் கல்கியின் எழுத்துகள் தலைமுறை தாண்டி வாசிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.