திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (10:08 IST)

அமித்ஷாவின் தமிழக வருகை… ரஜினியுடன் சந்திப்பா?

தமிழகம் வர உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா ரஜினியை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜக அடுத்ததாக தமிழகத்தைக் காலூன்ற வேண்டும் எனக் கடுமையாக உழைத்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜக தமிழக தலைவர்களுடன் தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை செய்வார் என தெரிகிறது. 

மேலும் பாஜக தலைவர்களோடு மட்டும் இல்லாமல் ரஜினியையும் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினியை தங்கள் கட்சிக்கு இழுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பாஜக திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் ரஜினி பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரை அமித் ஷா சந்தித்தால் அது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும்.