செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (16:17 IST)

புஷ்பா படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? வெளியான தகவல்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் முதலில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் இப்போது பஹத் பாசில் நடிக்க உள்ளாராம்.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவர் விலகவே இப்போது பஹத் பாசில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி விலகியதற்கு அவர் கேட்ட சம்பளம்தான் காரணமாம். வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் வரைக் கேட்டுள்ளாராம். அதனால் தயங்கிய படக்குழு அவரை வேண்டாம் என சொல்லவே அவர் கேட்ட சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு கொடுத்து பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளதாம்.