1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (22:02 IST)

தியேட்டர் அதிபர்களை வச்சு செஞ்ச விஜய்?

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரண்டையும் கட்ட முடியாது என்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் பிடிவாதமாக திரையரங்குகளை மூடினர்.



 
 
இந்த நிலையில் இந்த வேலைநிறுதத்ததிற்கு பொதுமக்கள் ஆதரவும் இல்லை, பெரிய நடிகர்களின் ஆதரவும் இல்லை. ரஜினி, கமல் கூட மேம்போக்காகத்தான் டுவீட் செய்தனர்.
 
அஜித் எந்த விஷயத்திற்கு கருத்து சொல்ல மாட்டார் என்பதை அவரை விட்டுவிடலாம், ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜல்லிக்கட்டு என அனைத்துக்கும் தனது கருத்தை கூறிய விஜய், இந்த  விஷயத்தில் வாயைத்திறக்கவே இல்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கின்றதாம்
 
விஜய்யின் படங்கள் நன்றாக ஓடி வசூல் பார்த்தாலும் பொய்க்கணக்கை காண்பித்து நஷ்ட ஈடு கொடு என்று விஜய்யை அவ்வப்போது மிரட்டி வரும் திரையரங்கு அதிபர்களுக்கு இது தேவைதான் என்று தான் அவர் அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆக, விஜய் திரையரங்கு உரிமையாளர்களை வச்சு செஞ்சதாகவே கருதப்படுகிறது.