வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (17:59 IST)

எதற்காக இந்த ஆசை என இசைஞானியை தாக்கும் கங்கை அமரன்!

காப்புரிமை தொடர்பாக இசைஞானி இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று  நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இசையுலகில் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
இது குறித்து இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன், என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள், அந்தளவுக்கா பண கஷ்டம் வந்துவிட்டது. 
 
பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். இசையை வியாபாரமாக்க கூடாது. நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அது நமக்குதானே பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசை அமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது என கங்கை அமரன் தனது கண்டனத்தை  தெரிவித்திருக்கிறார்.