வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (20:56 IST)

'சர்கார்' டீசர் வெளிவந்த சில நிமிடங்களில் ரஜினி டுவீட் ஏன்?

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளிவந்தது. இந்த டீசர் குறித்த ஹேஷ்டேக் 6.05 மணிக்கே டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக டீசர் குறித்த டுவீட்டுக்கள் அதிகமாகி சமூக வலைத்தளமே பரபரப்பில் இருந்தது

இந்த நிலையில் 'சர்கார்' டீசர் வெளிவந்த சுமார் ஒரு மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த் தான் நடித்து கொண்டிருக்கும் 'பேட்ட' படம் குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார். பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தான் நன்றி சொல்லி கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த டுவீட்டால் விஜய் ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் ரஜினியின் டுவீட் குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர். இதனால் 'சர்கார்' டீசர் குறித்த டுவீட்டுக்கள் குறைய ஆரம்பித்துவிட்டன. 'சர்கார்' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களுமே 'சன் பிக்சர்ஸ் ' தயாரிக்கும் படங்களாக இருக்கும் நிலையில் சர்கார் டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களில் ரஜினிகாந்த், இரண்டு மாதங்களுக்கு பின்னர் திடீரென டுவீட் போட வேண்டிய அவசியம் என்ன? இது தற்செயலாக நடந்ததா? அல்லது இதற்கு பின்னணியில் ஏதாவது இருக்கின்றதா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.