வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (16:20 IST)

ஹரியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம் – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

இயக்குனர் ஹரியின் படங்கள் பெரிய அளவில் சமீபகாலமாக சரியாக போகாததற்கு என்ன காரணம் என்பதை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பத்திரிக்கையாளராக மற்றும் நடிகராக என பல பாத்திரங்களை வெற்றிகரமாக வகித்தவர். இப்போது அவர் சாய் வித் சித்ரா என்ற யுட்யூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அதில் ஒரு ரசிகர் இயக்குனர் ஹரியின் சில படங்கள் சமீபகாலமாக வசூலில் பெரிய அளவில் சோபிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் ‘ஹரி படத்தின் கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்களுக்கு சலித்து விட்டது’ எனக் கூறியுள்ளார்.