திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (12:12 IST)

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவான கதை : பின்னணி என்ன?

நடிகர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.


 

 
நடிகர் ராஜ்கிரனை ஹீரோவாக்கி  ‘பவர் பாண்டி’ என்ற படத்தை அவர் இயக்குகிறார். பவர் பாண்டி படத்தின் போஸ்டரையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று காலை பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
இந்நிலையில், தனுஷ் ஏன் ராஜ்கிரணை ஹீரோவாக்கினார் என்பதற்கு கோடம்பாக்கத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது 25 வருடங்களுக்கு முன்பு, ராஜ்கிராணின் தயாரிப்பில் உருவான படம்தான்  ‘என் ராசாவின் மனசிலே’. தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவை, ராஜ்கிரண் இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், அவரே அப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தார்.
 
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே, தனுஷ் தான் முதலில் இயக்கும் படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக்கியுள்ளார் என்றும், அவருக்காகவே அந்த கதை உருவாக்கப்படது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.