கமலுக்குப் பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவது யார்? மூன்று பிரபலங்களின் பெயர் பரிசீலனையில்!
நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன், நடிகர் சூர்யா மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய மூவரின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.