செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (23:14 IST)

யோகிபாபு திருமணம் எப்போது? அவரே கூறிய பதில்

இன்றைய தமிழ் சினிமாவில் அனேகமாக யோகிபாபு இல்லாத படமே இருக்க முடியாது. அஜித், விஜய் நடிக்கும் படங்கள் உள்பட பிரபலமான அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக இருந்து வருகிறார்.
 
இந்த நிலையில் பிரபல நடிகர் கயல் தேவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் யோகிபாபுவுக்கு திருமணம் எப்போது? அவர் யாரையாவது காதலிக்கின்றாரா? என்று கேட்கின்றார்.
 
இந்த கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு, 'நான் யாரையும் காதலிக்கவில்லை. வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின்னர் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு 'நான் காமெடியன் தானே, ஹீரோயின் தான் திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டார்கள்' என்று கூறினார்