ஜகம் சுகம் அடைந்ததும்.... வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
65 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் கொரோனா சூழலில் ஓட்டி தளத்தில் வெளிவருகிறது என வதந்திகள் பரவியது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர், தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம் இன்னும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இயல்பு நிலைக்குட் வரவில்லை. அதுவரை அனைவரும் பொறுமையாகக் காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள் எங்கள் மொத்தப் படக்குழு, தனுஷ் உள்பட பலரும்
பெரிய ஸ்கிரீனில் ரகிட ரகிட ஆடுவதையே விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புரா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஜகம் சுகம் அடைந்ததும் வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.