செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:52 IST)

அன்னைக்கு அவரை அப்படி பாத்தப்போ.. காதலில் விழுந்துட்டேன்! - நயன்தாரா சொன்ன காதல் கதை!

நடிகை நயன்தாரா குறித்த ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில் அதில் தனது காதல் அனுபவம் குறித்து நயன்தாரா பேசியுள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவரும் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களுக்கு தற்போது உயிர் மற்றும் உலக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

நயன்தாராவின் சிறுவயது முதல் சினிமா வாழ்க்கை வரையிலான காலத்தை ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேர் டேல்’ என்ற பெயரில் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படமாக தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் 18ம் தேதி வெளியாக உள்ளது. இதில் நயன்தாரா தனக்கு விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது குறித்து பேசியுள்ளார்.
 

 

அதில் அவர் “பாண்டிச்சேரியில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. எனது காட்சிக்காக நான் காத்திருந்தேன். அப்போது விஜய் சேதுபதி சாருக்கு ஒரு காட்சியை விக்கி விளக்கி பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்போது எந்த காரணமும் இல்லாமல் விக்கியை வித்தியாசமாக பார்த்தேன். அப்போது அவரிடம் ஒரு அழகை கண்டேன். அவர் விஷயங்களை விளக்கும் விதம், இயக்குனராக செயல்படும் விதம் அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K