வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (18:24 IST)

உண்மையான சுதந்திரம் என்றால் என்ன.? மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்த அட்லீ..!!

Atlee
சுதந்திர தினமான இன்று மகாத்மா காந்தியின் கருத்தை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமான அட்லீ, இன்று பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.  ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய  ஜவான் திரைப்படம் வசூல் மழை பொழிந்தது.
 
இந்நிலையில் சுதந்திர தினமான இன்று பெண் பாதுகாப்பு குறித்து மகாத்மா காந்தி சொன்ன கருத்தை தனது எக்ஸ் தளத்தில் அட்லீ பதிவிட்டுள்ளார்.  

Atlee Twit
"இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியின் கருத்தை  இயக்குநர் அட்லீ பதிவு செய்துள்ளார்.

 
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெண் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.