செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (23:05 IST)

சூர்யா- ஜோதிகா மகள்10 ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண்?

தமிழகம் முழுவதும் நேற்று 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த மாணவி  மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளார்.

அவரது மதிப்பெண்,

தமிழ்- 95
ஆங்கிலம்- 99 மதிப்பெண்கள்,
அறிவியல்- 98,
சமூக அறிவியல் – 95,

கணிதம்100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தங்கள் மகள் தியா அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளதைப் போன்று சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேசனில் படித்து வரும் மாணவர்களும் நல்ல  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதால் சூர்யா குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.