பப்ஜி கேம் போனால் என்ன??? ரஜினி பட வில்லன் அறிமுகப்படுத்திய பாஜி கேம் !
சீனா செயலிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடைவிதித்தது. இதில் டிக் டாக் உள்ளிட் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்ட செயலிகளின் தடையால் மக்கள் விமர்சித்தனர். ஆனால் அதுதான் சரி என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் சிறுவர்களும், இளைஞர்களும் மிகத் தீவிரமாக விளையாடி வந்த பப்ஜி கேமிற்கும் மத்திய அரசு தடைவிதித்தது.
இதனைத்தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பப்ஜி தடைக்காக வருத்தம் வேண்டாம் பாஜி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
பப்ஜிக்கு பதிலாக அதற்கு இணையான ஒரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட பாஜி ( பியர்லெஸ் அண்டு யுனைட்டட் கார்ட்ஸ்) என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் வரும் வருவாயில் 20% பாரத் கே வீர் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் நாட்டுக்காகப் பாதுக்காப்புப் பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு இது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜி விளையாட்டை நடிகர் அக்ஷய்குமார், முன்னாள் பேட்மிண்ட வீரர் கோபிசந்த் ஆகியோருடன் இணைந்து அறிமுகப்படுத்தினார்.