புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (16:24 IST)

நடிகர் விஜய்க்கு புத்தகம் பரிசளித்த விஜே ரம்யா!

VIJAY RAMYA
பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ரம்யா  நடிகர் விஜய்யை சந்தித்து அவருக்குப் புத்தகம் பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் வம்சி இயக்கத்தில்ம் தில்ராஜூ தயாரிப்பில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான படம்  வம்சி.

இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும்  பல வெற்றி  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவரான  விஜே ரம்யா  நடிகர் விஜய்யை  இன்று நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது, உடல் பருமன் குறைப்பது குறித்து ரம்யா எழுதியுள்ள புத்தகத்தை  விஜய்க்கு வழங்கினார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.