அநியாயத்துக்கு அழகா ஆகிட்டே போறீங்க... சீரியல் நடிகை சித்ராவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.
இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது, பிங்க் கலர் சுடிதார் அணிந்து வீட்டின் மொட்டை மடியில் போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் லாக்டவுன் முடிவதற்குள் தேவதை போல் ஆகிடுவீங்க போல.. என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சித்ரா எப்போதும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண் போல் இருப்பது தான் அவரது ரசிகர்களை இந்த அளவிற்கு ரசிக்கவைக்கிறது.