திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (12:18 IST)

நடிகர் விவேக் உறவினருக்கு கொரோனா: திரையுலகம் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது குறித்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் தற்போது நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா என்று அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பதிவை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக சிகிச்சைக்கு செல்லலாம் என்றும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்