வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (21:58 IST)

'விஸ்வாசம்' படம் உண்மையில் ரூ.125 கோடி வசூல் செய்ததா?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இதுவரை வெளிவந்த அஜித் படங்களை விட மிக அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண் பார்வையாளர்கள் இந்த படத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்ததை அதிகம் பார்க்க முடிந்தது. அந்த வகையில் 'விஸ்வாசம்' படம் வணிக ரீதியில் வெற்றிதான் என்பதில் சந்தேகம் இல்லை

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் வசூல் குறித்து வரும் தகவல்கள் எதுவுமே நம்பும்படியாக இல்லை என்பதே நடுநிலை பத்திரிகையாளர்களின் கருத்தாக உள்ளது. 'பேட்ட', விஸ்வாசம்' இரண்டு படங்களுமே வரும் ஞாயிறுக்குள் ரூ.100 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னணி விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி  அளித்த சில நிமிடங்களில் 'விஸ்வாசம்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற கேஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் விஸ்வாசம் ரூ.125 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துவிட்டதாக ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டது.

ரூ.125 கோடி வசூல் செய்ததை குறிப்பிடும் கேஆர்ஜி ஸ்டுடியோஸ், ரூ.100 கோடி வசூல் செய்தபோது ஏன் ஒரு டுவீட் போடவில்லை என்ற சந்தேகம் பலர் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூல் என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில் அதனை தெரிவிக்காமல் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டியளித்தவுடன் ரூ.125 கோடி வசூல் என்று குறிப்பிட்டத்தை அஜித் ரசிகர்கள் தவிர யாரும் நம்பவில்லை என்பதே எதார்த்த நிலையாக உள்ளது