3 ஏரியாக்களில் விஸ்வாசம் படத்திற்கு தடை: அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நாளை வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதுதான் கோவை, திருப்பூர், ஈரோட்டில் விஸ்வாசம் படத்தை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை. இதனால் இந்த மூன்று பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோட்டில் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி கோவை பகுதி விநியோகஸ்தர் சாய்பாபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டு மனு இன்னும் சற்றுநேரத்தில் விசாரணைக்க்கு வரவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 'விஸ்வாசம்' படத்திற்கான தடை நீங்கி மூன்று ஏரியாக்களிலும் படம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.