ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (13:58 IST)

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம் அரசியல் கதையா?

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த படம் 1988 ஆம் ஆண்டு மாலத்தீவு அதிபரை எதிர்த்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்த போது அவர் இந்திய ராணுவத்தின் உதவியைக் கோரினார்.  அவருக்கு இந்திய ராணுவம் உதவி செய்ய “ஆப்பரேஷன் கேக்டஸ்” நடவடிக்கையில் ஈடுபட்டது. இதை மையப்படுத்திதான் இப்போது சல்மான் கான் படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.