புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (13:38 IST)

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கிய விவகாரம் – அமலாபாலுக்கு விஷ்ணு விஷால் ஆதரவு !

படத்தில் இருந்து தன்னை நீக்கியது குறித்து தயாரிப்பாளர் மேல் குற்றச்சாட்டு வைத்த அமலாபாலுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதற்கு அமலாபால் ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அந்தப்படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தேதிகள் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் அந்தப்படத்தில் நடிக்க பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அமலாபால் தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆடைப்படத்தின் டிஸர் இப்போது வெளியானதும் ஒருக் காரணமாக இருக்கலாம் என தயாரிப்பாளர்கள் மேல் குற்றச்சாட்டு வைத்தார். இப்போது அமலா பாலுக்கு ஆதரவாக விஷ்ணு விஷால் குரல் கொடுத்துள்ளார். தனது டிவிட்டரில் அமலாபாலின் அறிக்கையைப் பகிர்ந்து ‘ஒரு நடிகை முன்வந்து பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நடிகர்கள், நடிகைகள் மீதே குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர். பல தயாரிப்பாளர்கள் முதலாளி என்று அவர்களை அழைத்து மரியாதை கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். நாணயத்தின் இரு பக்கங்கள் போல சில அருமையான தயாரிப்பாளர்களும் உள்ளனர். அதே நேரத்தில் நடிகர்களுக்கு எதிராக உணர்வுபூர்வமாகவும், வேலை நிமித்தமாகவும், உடல் ரீதியாகவும் இழைக்கப்படும் அநீதி குறித்தும் பேசவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.