விஷாலின்''லத்தி'' பட அறிவிப்பால் புதிய சர்ச்சை....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது, லத்தி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் அறிவிப்பைப் பற்றிய சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் படத்திற்குப் பின்,தற்போது நடித்து வரும் படம் லத்தி. இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், லத்தி படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனருக்கே தெரியாமல் தயாரிப்பாளர் நந்தா, ரமணா மற்றும் விஷால் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு பற்றி இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.