வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (08:30 IST)

விஜய்சேதுபதியுடன் மோத தயாராகிய விஷால்!

விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் நிலையில் அதே தினத்தில் விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் 10ம் தேதியை முடிவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
 
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ரிலீஸாகும் அதே தேதியில் தனது ’ஆக்சன்’ படத்தை ரிலீஸ் செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ‘ஆக்சன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே அக்டோபர் 10ம் தேதி விஜய்சேதுபதி, விஷால் படங்கள் மோதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலின்போது விஷாலுக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை விஜய்சேதுபதி கூறிய நிலையில் தற்போது இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன்’ படத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ்,சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேபோல் விஷாலின் ஆக்சன்’ படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். சுந்தர் சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.