செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:56 IST)

என்ன லொள்ளு சபா வாட அடிக்குது… விருமன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 12 இன்று தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை மதுரையில் நடந்தன.

படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் மோதலே கதைக்களம் என டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி, சிங்கம்புலி மற்றும் சூரி ஆகியோர் பேசும் சொலவடைக் காட்சிகள் லொள்ளு சபா காமெடிக் காட்சிகளை நினைவுபடுத்துவது போல உருவாகியுள்ளன. இந்த காட்சி தற்போது சமூகவலைதளத்தில் ட்ரோல்களாகவும், மீம்களாகவும் வைரல் ஆகி வருகிறது.