செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:06 IST)

மனைவி மற்றும் மகளுக்கு மனம் உருகி வாழ்த்து கூடிய விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் பெண் குழந்தை பிறந்ததும் தெரிந்த விஷயமே. 
 
அவ்வப்போது மகளின் புகைப்படத்தை முகம் காட்டாமல் விராட் கோலி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அனுஷ்கா குழந்தையை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு women's day வாழ்த்து கூறியுள்ளார். 
 
அந்த பதிவில்,  ஒரு குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முதுகெலும்பு குளிர்ச்சியானது, நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதற்கு சாட்சியம் அளித்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும், அவர்களுக்குள் கடவுள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகக் கடுமையான, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தன் தாயைப் போல வளரப் போகிறவளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். மேலும் உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். என பதிவிட்டுள்ளார்.