1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (15:01 IST)

மிரட்டும் ’மன்னர் வகையறா’ டீசர்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு விமல் நடிக்கும் படம் மன்னர் வகையறா. இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
காமெடி மற்றும் குடும்பப் படங்களில் நடித்து வந்த விமல் தற்பொழுது ஆக்‌ஷன் களத்தில் குதித்துள்ளார். இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். ரோபோ ஷங்கர் மாரி தனுஷ் கெட்டப்பில் கலக்கி இருக்கிறார்.

’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் விமல் தயாரிப்பில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது.