1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:20 IST)

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அறியப்பட்ட இயக்குனர் போஸ் வெங்கட், 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து அவர் இப்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் வழங்குகிறது.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. பள்ளிக்கூட வாத்தியாராக செல்லும் விமல், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்படும் பிரச்சனைகளும் அதை எதிர்த்து அவர் போராடுவதும் கதையாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

நேற்று டிரைலர் ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் விமல் “இந்த படத்துக்காக வெற்றிமாறன் சார் கடுமையாக உழைத்துள்ளார். அவரும் விஜய் சேதுபதியும் பலரைக் கைதூக்கிவிடுகிறார்கள். நானும் அது போல சிலரைக் கைதூக்கி விட நினைத்தேன். ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டு விட்டார்கள். அதிலிருந்துதான் கற்றுக் கொண்டேன். கைதூக்கி விட வேண்டும் என்றாலும் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று” என ஜாலியாகப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சை மேடையில் அமர்ந்திருந்த விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகிய இருவரும் ரசித்துக் கேட்டனர்.