1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (16:55 IST)

ரஜினியுடன் மோதும் வில்லன் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லன் யார் எனத் தெரியவந்துள்ளது.

 
‘காலா’, ‘2.0’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மும்பைக்குச் சென்று அவரிடம் கதை சொல்லிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். அவருக்கும் ஓகே தான் என்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.