விளம்பரங்களில் இருட்டடிப்பு… வருத்தத்தில் விக்ராந்த்?

vikranth
cauveri manickam| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (18:30 IST)
படத்தின் விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்வதால், வருத்தத்தில் இருக்கிறாராம் விக்ராந்த். 
விஜய்யின் சித்தி பையன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் விக்ராந்த். ஆனால், அவர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. விஷாலின் நண்பனாக நடித்த ‘பாண்டிய நாடு’ படத்தில், சிறிய கேரக்டர் என்றாலும் மனதில் நிற்கிற கேரக்டராக இருந்தது.

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக சுந்தீப் கிஷண் நடித்துள்ளார். ஆனால், படத்தின் எல்லா போஸ்டர்களிலும் சுந்தீப் கிஷண் போட்டோ மட்டுமே இடம்பெற்று வருகிறது. இன்னொரு ஹீரோவான விக்ராந்த் போட்டோ ஒரு போஸ்டரில் கூட இல்லை என்பதால், மன வருத்தத்தில் இருக்கிறார் விக்ராந்த் என்கிறார்கள். ஆனால், தெலுங்கு தயாரிப்பாளர்களை இந்தப் படத்துக்குக் கொண்டு வந்ததால்தான், சுந்தீப் கிஷணுக்கு முன்னுரிமை கொடுக்கிறாராம் சுசீந்திரன்.


இதில் மேலும் படிக்கவும் :