திங்கள், 7 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (08:59 IST)

விக்ரம் படத்தின் ஒரு வரிக் கதை இதுதானா? பிரபல திரையரங்கம் வெளியிட்ட வைரல் தகவல்!

விக்ரம் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் கதைச்சுருக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மல்டிப்ளக்ஸ் திரையரங்கான “PVR” சினிமாஸ் தங்கள் இணையதளத்தில் படம் பற்றிய கதைச்சுருக்கத்தில் “விக்ரம், ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, கடத்தப்பட்ட அரசு அலுவலர் ஒருவரை மீட்கும் பணியில் இறங்குவது சம்மந்தமான திரைப்படம்” என்று தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது.