விக்ரமின் ‘கோப்ரா’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
உயிர் உருகுதே என்றார் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடல் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.