செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (15:58 IST)

விக்ரம் அஜய் ஞானமுத்து இணையும் அடுத்த படம் நிறுத்தப்பட்டதா?

நடிகர்  விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான கோப்ரா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை விக்ரமும்  உறுதிப் படுத்தியுள்ளார்.  பட ரிலீஸ் போது டிவிட்டர் ஸ்பேஸில் கோப்ரா படக்குழுவினருடன் நடந்த உரையாடலில் கலந்துகொண்ட விக்ரம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அளித்த நிலையில் இப்போது அந்த படத்தை தொடங்க விக்ரம் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.