விஜய் சேதுபதியின் மகனா இது... படு குண்டாக மாறிய ஷாக்கிங் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் நடித்து ஹீரோக்களை வெளுத்து வாங்குவார். அந்தவகையில் மாதவன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்ப்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி கடந்த 2003ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜெஸி என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு சூர்யா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சூர்யா, நானும் ரௌடி தான் படத்தில் சின்ன வயசு விஜய் சேதுபதியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து சிந்துபாத், ஜூங்கா உள்ளிட்ட படங்களில் ஒரு சில ரோல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதி தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அதில், மகன் சூரியா அடையாளம் தெரியாத அளவிற்கு அப்பாவை விட படு குண்டான தோற்றத்தில் இருப்பதை பார்த்து ... அட நம்ம விஜய் சேதுபதி பையனா இது? என அனைவரும் ஷாக்காகி விட்டனர்.