அக்கட தேசத்தில் விஜய்யின் 'சர்கார்' செய்த சாதனை
தளபதி விஜய்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபவாளிக்கு வெளியான படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பெரும் சாதனை படைத்தது.
படம் வெளியான இரண்டு வாரத்தில் ரூ.200 கோடி வசூலை ஈட்டிவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் சர்கார் படம் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சேர்த்து 18 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் அதிக வசூலை ஈட்டியிருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் போல் ஆந்திராவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.