செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (16:06 IST)

விஜயகாந்துக்காக வீட்டுக்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர்!

விஜயகாந்த் 6 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நலம் குணமடைந்து விரைவில் அவர் சினிமாவில் நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.மேலும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய்காந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜயகாந்த் நடிக்க சம்மதித்தாலும், அவரின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு அவரின் வீட்டிலேயே அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் விஜய் மில்டன் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.