மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயகாந்த்… வைரல் புகைப்படம்!
விஜயகாந்த் தனது மனைவியின் பிறந்தநாளில் கலந்துகொண்ட விஜயகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.
சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகர் விஜயகாந்த் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.