வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (10:53 IST)

பேருக்கு தான் விஜய் மாஸ்டர்? மாஸ்டரில் ரியல் மாஸ்டர் விஜய் சேதுபதி!!!

விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தின் மூலம் பக்கா வில்லன் என்ற பெயரை எடுத்துள்ளார். 

 
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியரான விஜய் மதுவுக்கு அடிமையாகி போதையுடன் பணி செய்து கொண்டிருப்பதால் அந்த கல்லூரியில் இருந்து நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக வெளியேறுகிறார். 
 
அதன் பிறகு அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் மாஸ்டராக நியமனம் செய்யப்படுகிறார். அந்தப் பள்ளி வில்லன் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் அங்கு உள்ள சிறுவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார். 
இதன் பின்னர் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையில் நடக்கும் மோதலும் விஜய் சேதுபதியின் கொட்டத்தை விஜய் எப்படி அடக்கினார் என்பது தான் மாஸ்டர் படத்தின் கதை. 
 
விஜய் வழக்கம் போல் ஒரு மாஸ் ஹீரோவாக ஜேடி என்னும் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் விஜய் சரியாக ஸ்கோர் செய்கிறார். அதேபோல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பிறகு அவருடைய மாஸ் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் ஆரம்பமாகின்றன. 
 
பவானி என்ற வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட விஜய்க்கு இணையான கேரக்டர் என்பதும் அவருடைய வழக்கமான பாணியிலான நக்கலான நடிப்பும் அவரது கேரக்டரை மெருகேற்றுகிறது. 
கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிகப்பெரிய பலம் அவர் வரும் காட்சிகளே. 
 
விஜய் இந்த படத்தில் மாஸ்டராக ஜொலிக்க விஜய் சேதுபதி தனது வில்லத்தனத்தை அர்புதமாக காட்டியதே காரணம். பேட்ட படத்ஹில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த போதும் இந்த படத்தில் வில்லனுக்கான அனைத்து அம்சங்களையும் தனது நடிப்பிலும் நடை உடையிலும் பக்காவாக காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.