திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:56 IST)

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு இவ்வளவு சம்பளமா? விஜய் சேதுபதிக் காட்டில் மழைதான்!

நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகப்பெரிய தொகையை ஊதியமாக பெற்று வருகிறாராம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மாஸ்டர் செஃப்’ விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சினிமாவில் பிஸியாக நடிக்கும் விஜய் சேதுபதி இதில் ஒரு எபிசோட்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.