விஜய் சேதுபதி பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜியான குட்டி ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி , இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்களிப்பில் சுமார் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகுயுள்ள படம் குட்டி ஸ்டோரி. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியானது.
பிரபல இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை ஹிட் பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதக இப்படத்தின் தயாரிப்பாலர் ஐசரி கணேஷ் த்னது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.