வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:50 IST)

சிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி !

சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் புரோமோஷன் பணிகளின் போது நடிகர் சிரஞ்சீவியின் காலில் விழுந்து விஜய் சேதுபதி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சைரா நரசிம்ம ரெட்டி விடுதலைப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, கஜபதி பாபு, நயன்தாரா, தமனா மற்றும் அனுஷ்கா என இந்தியாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது.  இந்தப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி பற்றி பேசிய சிரஞ்சீவி ‘இந்தப்படத்தில் சைராவுக்கும் தோல் கொடுக்கும் தமிழக வீரனாக நடித்துள்ளார். அவரது பிஸியான நேரத்தில் இந்தப் படத்துக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறார். என் மீது அதிக பாசம் வைத்துள்ள அவர் என்னை எப்போதும் ’அண்ணா அண்ணா’ என்றுதான் எப்போதும் கூறுவார். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சி.’ எனக் கூறிக்கொண்டே இருக்கும்போது விஜய் சேதுபதி அவர் காலில் விழுந்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவியும் அவரைத் தூக்கிவிட்டு நன்றி கூறினார்.