புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:33 IST)

விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கு : வைரலாகும் கார்த்திக் சுப்புராஜ் வீடியோ

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான டாப் நடிகர்களில் ஒருவராகிவிட்டார் விஜய் சேதுபதி.
 
இவரது நடிப்பில் ஒவ்வொரு மாதமும்  இரண்டு படங்கள் வெளியாகி வருகிறது. விஜய் சேதுபதியின் சீதக்காதி   ரிலீசுக்காக காத்திருக்கின்றது. சமீபத்தில் வெளியான ‘சீதக்காதி’ ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முந்தைய படமான 96  படத்தில் காதல் மழை பொழிந்த விஜய் சேதுபதி,  இதில் அய்யா என்ற வயதான தோற்றத்தில் நடித்து உள்ளார். படத்துக்கு படம் வித்தியாசத்தை கொடுக்கும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
பல படங்களில் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவ காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.  
 
இந்நிலையில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் ரிலீசின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நாளை ‘தென்மேற்கு பருவக்காற்று’ வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர் யார் விஜய் சேதுபதி என்று கேள்வி கேட்க விரைவில் அவரை உங்களுக்கு தெரியும் என்று கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.