புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 16 ஜூலை 2018 (16:54 IST)

எல்லாம் தலைவருக்காக... விஜய் சேதுபதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. சமீபத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி சென்னை திரும்பினார்.
 
இரண்டாம்கட்ட படபிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளது. மதுரையில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது. அதற்கேற்ப விஜய் சேதுபதி அவர் நடித்து முடித்துள்ள நான்கு படங்களின் புரமோ‌ஷன் வேலையில் ஈடுபட்டுள்ளார். 
 
ஆம, அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் ஜுங்கா, சீதக்காதி, 96, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களின் புரமோஷன் வேலை இப்பொழுதே துவங்கிவிட்டார். 
 
இதற்கான காராணம், ரஜினிதான் என விஜய் சேதுபதி தரப்பு கூறுகிறது. ஏனெனில், ரஜினி படத்தின் வில்லனான விஜய் சேதுபதிக்கு கால்ஷீட் இல்லாததால் இதுவரை அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. 
 
எனவே, இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது என தனது பணிகளை வேகமாக முடித்து வருகிறாராம் விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் 4 படங்களின் புரமோஷனில் ஈடுப்பட்டுள்ள நடிகராக விஜய் சேதுபதியாக உள்ளார்.