வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:36 IST)

சைக்கிளில் வந்ததற்கு இதுதான் காரணம்: விஜய் பி.ஆர்.ஓ அடடே விளக்கம்

தளபதி விஜய் இன்று சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து நடிகர்களும் காரில் சென்று வாக்கு பதிவு செய்த நிலையில் விஜய் மட்டும் சைக்கிள் சென்றது ஏன் என்ற என்பது குறித்து சமூக வலைதளங்களில் அவர்களுடைய ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
லாக்டவுன் நேரத்தில் கோடிக்கணக்கானோர் நடந்து சென்றதை குறிப்பிடுவதற்காகவும், மேலும் பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையிலும் விஜய் சைக்கிளில் வந்ததாகவும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்குள் விஜய் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் வீட்டுக்கு அருகில்தான் பூத் இருந்தது என்பதாலும் கார் நிறுத்த பூத் அருகே போதிய இடம் இல்லை என்பதாலும் தான் விஜய் சைக்கிளில் சென்றதாகவும் அதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது
 
விஜய் சைக்கிளில் வந்ததற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த கேள்வியை தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்