புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (20:56 IST)

விஜய் பட பாடகர் கொரொனா விழிப்புணர்வு பாடல்…

தடுப்பூசியால் மட்டும்தான் நாம் இந்தக்  கொடிய காலத்தைக் கடந்து செல்ல முடியும் என்று பின்னணிப் பாடகர் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓரளவு கொரொனா தொற்றுக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் மக்களும் பல்வேறு தொழில்பிரிவினர் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாநில அரசும், அமைச்சர்களும் , தொண்டு நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளைப் பணமாகவும் பொருளாகவும் வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசியால் மட்டும்தான் நாம் இந்தக்  கொடிய காலத்தைக் கடந்து செல்ல முடியும் என்று பின்னணிப் பாடகர் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் இதைத் தடுப்பதற்காக அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் சினிமா நடிகர்களும், கலைஞர்களும் கொரொனா விழிப்புணர்வு வீடியோக்களும் பாடல்களும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  நடிகரும் பாடகருமான கிரிஸ் கொரொனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமார் எழுதியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.