1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (07:56 IST)

காக்கா கழுகு கதையின் எதிரொலி… ரஜினியால் மாறிய விஜய் பட ஷூட்டிங் ஸ்பாட்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அடைமொழி யாருக்கு என ரஜினி, விஜய் இடையே போட்டி நிலவுவதாக அரசல்புரசலாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன ‘காக்கா – கழுகு’ உவமை கதை பேசுபொருளானது. இதையடுத்து நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் இதற்கு விஜய் பதில் கதை சொல்ல அதுவும் வைரலானது.

இப்படி மறைமுகமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், அவர்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அடித்துக் கொள்வதும் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் 170 படத்தின் ஷூட்டிங்கும், விஜய் 68 படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அருகருகே நடக்க இருந்துள்ளது.

ஆனால் இப்போது விஜய் பட ஷூட்டிங் இப்போது வேறொரு ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் விஜய், ரஜினியை சந்திக்க தயங்குவதே என சொல்லப்படுகிறது.